ஸ்ரீதேவி குறித்து அமலாவின் அர்த்தமுள்ள பதிவு
- IndiaGlitz, [Monday,March 05 2018]
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் அவரது குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அவரது அழகே அவரது உயிருக்கு ஆபத்தாக மாறிவிட்டதும் ஒரு காரணம்.
ஸ்ரீதேவி என்றால் அழகு, அழகு என்றால் ஸ்ரீதேவி என்று அகராதியில் பதிவு செய்யும் அளவுக்கு அழகாக இருந்த ஸ்ரீதேவி, கொஞ்சம் வயதானவுடன் அவரது அழகு குறித்து ஊடகங்கள் மாற்றி எழுத ஆரம்பித்துவிட்டன. இளமையில் இருக்கும் அழகு வயது ஆக ஆக மறையும் என்பது இயற்கை. ஆனால் ஸ்ரீதேவியை அழகாக மட்டுமே பார்த்து பழக்கப்பட்டுவிட்ட ஊடகங்கள் அவர் அழகு குறைந்ததையும் தலைப்பு செய்தியாக்கின. இதனால் ஸ்ரீதேவி சற்று அதிர்ச்சி அடைந்து அழகை கூட்ட செயற்கை முறையில் பல அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டார். அதுவே அவருக்கு பின்னாளில் எமனாக மாறிவிட்டது.
இதுகுறித்து நடிகை அமலா தனது சமூக வலைத்தளத்தில் ஒரு சாட்டையடி பதிவை பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: என்னை என் விருப்பபடி வயதாக விடுவீர்களா? ஒருவர் வயதாவது அவரவர் முகத்திலும், உடலிலும் தென்படும் வழக்கமான விஷயம் தான். நான் எப்படி இருக்கிறேன், நான் சோர்ந்து இருக்கிறனா? உடல் எடை கூடிவிட்டேனா என்று என்னை யோசிக்க செய்யாமல். என்னை நிம்மதியாக நானாக இருக்க விடுங்கள் என் மனது வயதை ஏற்றுக்கொள்ளுபடி என்னை விட்டுவிடுங்கள். வயதாவதை செய்திகளில் பெரிதாக்கி பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மேலும் நான் எனது சுய மரியாதை சீர்குலையாமல் உடை உடுத்த என்னை அனுமதியுங்கள். எல்லா நேரத்திலும் ஒருவர் ஜீரோ சைஸ் உடலை கொண்டிருக்க முடியாது. அந்தந்த வயதில், அந்தந்த உடல் நலம், உடல் உருவத்திற்கு ஏற்ப ஒருவர் உடை உடுத்த முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
உங்களது ப்ரைம் டைம், முதல் பக்க செய்தி, அட்டைப்படம் அனைத்தையும் தாண்டி எனக்கென ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. எனக்கென்று ஒரு மனம் உள்ளது. எனக்கென ஒரு மனிதன், என் உலகம், என் குடும்பம், என் உண்மைகள், என் வாழ்க்கை என்று பல இருக்கின்றன. அதற்கு எல்லாம் கொஞ்சம் மதிப்புக் கொடுங்கள். அதை கெடுத்துவிட வேண்டாம்' என்று அமலாபால் தனது பதில் குறிப்பிட்டுள்ளார்.
அமலாவின் பதிவில் ஸ்ரீதேவி குறித்து ஒரு வார்த்தை கூட இல்லையென்றாலும், புரிய வேண்டிய ஊடகங்களுக்கு அவர் என்ன சொல்ல வந்துள்ளார் என்பது புரியும்.