நயன்தாரா பாடலுக்கு க்யூட் ஆக்சன் கொடுத்த ஆல்யா மானஸா: வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,November 21 2020]

ராஜா ராணி என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆல்யா மானசா என்பதும் அந்த தொடரின் நாயகன் சஞ்சீவ் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ஆல்யாவுக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் அழகழகான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஆல்யா மானசா தற்போது விஜய் நடித்த ‘வில்லு படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் நோக்கி பாடும் பாடலான ’ஆர் யூ கிரேசி என்ற பாடலுக்கு சூப்பரான க்யூட்டான ஆக்சன் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

நயன்தாரா போலவே மிக அழகாக ஆக்சன் கொடுத்துள்ள இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் கமெண்ட்டுகளை லைக்ஸ்களையும் தெரிவித்து வருகின்றனர்.