நாங்கள் ஒளிரும் நட்சத்திரம்… பாலிவுட் நடிகை வெளியிட்ட கிளாமர் புகைப்படம் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம்வருபவர் நடிகை ஆலியா பட். தயாரிப்பாளரின் மகளாக அறிமுகமான இவர் தற்போது பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்துவரும் ஆலியா பட்டிற்கு தற்போது ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்து இருக்கிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் கரண் ஜோகரின் இயக்கத்தில் “Students of the Year” எனும் படத்தில் அறிமுகமானவர்தான் ஆலியா பட். அதற்குப் பிறகு இவர் நடித்த “ஹைவே“ திரைப்படம் ஹிட் அடித்தது. இதனால் “உட்டா பஞ்சாப்“, டியர் ஜிந்தகி“, “Raazi“ என அடுக்கடுக்கான வெற்றிப்படங்களில் நடித்திருந்தார்.
தற்போது பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் காமத்திபுராவின் வரலாற்றைச் சொல்லும் கதையான “கங்குபாய் கத்தியவாடி“ திரைப்படத்திலும் தெலுங்கில் பிரபல இயக்குநராக இருந்துவரும் S.S.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் “RRR“ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதைத்தவிர தனது காதலரான ரன்பீர் கபூருடன் இணைந்து “பிரம்மாஸ்திரா“ எனும் பிரம்மாண்ட திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை ஆலியா பட் தற்போது “நாங்கள் தோலில் மூடப்பட்ட நட்சத்திரங்கள். நீங்கள் தேடும் ஒளி எப்போதும் உள்ளே இருக்கும்“ என்ற கேப்ஷனுடன் கிளாமர் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com