close
Choose your channels

பிகினி உடையை பிறந்த நாள் பரிசாக கொடுத்த பிரபல நடிகை! குவியும் கண்டனங்கள்

Sunday, August 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவர் தனது 12 வயது மகளுக்கு பிகினி உடையை பிறந்தநாள் பரிசாக கொடுத்து, அந்த உடையில் விதவிதமான புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜேம்ஸ்பாண்ட் நடித்த ’கேசினோ ராயல்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அலெஸாண்ட்ரா. இவர் பல உள்ளாடை விளம்பரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான டாப்லெஸ் மற்றும் பிகினி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட அலெஸாண்ட்ராவுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். சமீபத்தில் தனது கணவரை விவாகரத்து செய்த அலெஸாண்ட்ரா தற்போது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்

இந்த நிலையில் தனது மகளின் 12 வது பிறந்தநாளை மாலத்தீவில் அலெஸாண்ட்ரா சிறப்பாக கொண்டாடினார். மகளுக்கு பிறந்தநாள் பரிசாக மஞ்சள் நிற பிகினி உடையை கொடுத்து அந்த உடையை அணிந்த மகளின் விதவிதமான புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வந்தாலும், ஒரு சிலர் 12 வயது மகளுக்கு பிகினி மாட்டி வைத்து அழகு பார்க்க வேண்டுமா? என்ற கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment