'கட்டா குஸ்தி 2' எப்போது? நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பதில்..!

  • IndiaGlitz, [Wednesday,April 26 2023]

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ’கட்டா குஸ்தி’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்பது குறித்த கேள்விக்கு ஐஸ்வர்யா லட்சுமி பதில் கூறியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பூங்குழலி என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் அனைத்து புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் ’கட்டா குஸ்தி 2’ படம் எப்போது என கேட்கப்பட்டது. அதற்கு அதை இயக்குனர் தான் முடிவு செய்வார் என்றும் இரண்டாம் பாகம் எப்போது தயாரானாலும் அதில் தான் நடிகை தயார் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஐஸ்வர்யா லட்சுமி ஒரு குஸ்தி வீராங்கனை என்பது தெரியாமல் அவரை விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பிறகு ஏற்படும் பிரச்சனைகளை காமெடியாக அவர் சந்திப்பது தான் ‘’கட்டா குஸ்தி’ படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.. மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம்..!

கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

'அழகி' நடிகை நந்திதா தாஸை ஞாபகம் இருக்கிறதா? லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்..!

இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் பார்த்திபன் நடிப்பில் உருவான 'அழகி' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நந்திதா தாஸ் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

33வது பிறந்த நாளை கொண்டாடிய 'கில்லி' தங்கை நடிகை.. திருமணம் செய்யாததற்கு கூறிய காரணம்..!

தளபதி விஜய் நடித்த 'கில்லி' திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த நடிகை ஜெனிபர் தனது 33 வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில் அது குறித்த வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.

'கபாலி' படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தாணு திட்டம்.. முக்கிய காட்சிகள் மாற்றப்படுகிறதா? 

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான 'கபாலி' திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்றது.

பள்ளி மாணவராக கலக்கும் அசோக் செல்வன்.. 'சபா நாயகன்' டீசர்..!

 நடிகர் அசோக் செல்வன் பள்ளி மாணவராக நடித்திருக்கும் 'சபா நாயகன்' என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசர் வீடியோ வைரல் ஆகி வருகிறது