'எல்லாமே 90க்கு மேல தான்: ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய அதிதி ஷங்கர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த ’விருமன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் ’மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க அதிதிஷங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் விஜய் மற்றும் சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை என்று அவர் கூறியுள்ள நிலையில் விரைவில் இருவருடனும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் நடிப்பில் மட்டுமின்றி படிப்பிலும் அதிதி ஷங்கர் கெட்டிக்காரர் என்பதை சமீபத்தில் அவர் மருத்துவ படிப்பில் டிகிரி வாங்குவதிலிருந்து தெரியவந்தது. ஆனால் அதே நேரத்தில் அவர் பத்தாம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண் எடுத்து இருக்கிறார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த மதிப்பெண் பட்டியல் இதோ:

பிரெஞ்ச்: 97
ஆங்கிலம்: 91
கணிதம்: 97
அறிவியல்: 99
சமூக அறிவியல்: 91

பத்தாம் வகுப்பில் அவர் அனைத்து பாடங்களிலும் 90க்கும் மேல் எடுத்து உள்ளதை பார்த்து ரசிகர்களை பெரிய அளவில் ஆச்சரியப்படுத்தி உள்ளது. மொத்தத்தில் அதிதிஷங்கர் நடிப்பில் மட்டுமின்றி படிப்பிலும் படுசுட்டி என்பதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.