கொரோனாவை குத்துவிட்டு விரட்டும் நடிகை அதாஷர்மா!

  • IndiaGlitz, [Thursday,April 22 2021]

இந்தியா உள்பட உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற உலக சுகாதார நிறுவனமும் அனைத்து நாடுகளின் அரசுகளும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழ் நடிகை ஒருவர் கொரோனாவை குத்துவிட்டு விரட்டும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கல் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபுதேவா நடித்த ’சார்லி சாப்ளின்’ சிம்பு நடித்த ’இது நம்ம ஆளு’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும், கன்னடம் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை அதா ஷர்மா. இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’கொரோனாவை விரட்டுவோம்’ என்று பதிவு செய்து குத்துசண்டையில் ஈடுபடுவது போன்ற ஒரு சில கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு வழக்கம்போல் ஏராளமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும் ரசிகர்களின் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

குப்பையில் கிடந்த 10 பவுன் நகை: தூய்மை பணியாளரின் நேர்மையால் நடந்த பெண்ணின் திருமணம்!

கொருக்குப்பேட்டை பகுதியில் பெண் ஒருவரின் திருமணம் நடக்க காரணமாக இருந்த தூய்மைப் பணியாளரின் நேர்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

3 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை ரைசாவுக்கு மருத்துவர் கெடு

மருத்துவர் பைரவியின் தவறான சிகிச்சையால் தன்னுடைய முகம் வீங்கி விட்டதாகவும் இதனையடுத்து அவர் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் மருத்துவர் பைரவிக்கு பிக்பாஸ் பிரபலம் நடிகை ரைசா

தூத்துகுடி துப்பாக்கி சூடு: 15 கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினிகாந்த்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அந்த சம்பவத்தை விசாரணை செய்துவரும் விசாரணை ஆணையம் கேட்ட 15 கேள்விகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பதில் கூறியதாக

தனுஷின் 'ரவுடி பேபி' பாடலில் ஒரு விழிப்புணர்வு பாடல்: மருத்துவரின் புதிய முயற்சி

தனுஷ் சாய்பல்லவி நடித்த 'மாரி 2' படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' என்ற பாடல் மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் ஹிட் ஆனது என்பதும் யூடியூபில் மிக அதிக பார்வையாளர்களை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று

இன்னா மயிலு, யாரை பார்த்து முறைச்சுகினே: வைரலாகும் சிவகார்த்திகேயன் பாடல்!

பிக்பாஸ் கவின் நடித்துள்ள 'லிப்ட்' என்ற திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.