இந்த 2 வார்த்தையை கூகுளில் தேடி பாருங்கள்: 'தி கேரளா ஸ்டோரி' எதிர்ப்பாளர்களுக்கு நடிகையின் பதில்..!

  • IndiaGlitz, [Sunday,May 07 2023]

’தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இந்த இரண்டு வார்த்தையை மட்டும் கூகுளில் தேடிப் பாருங்கள் என அந்த படத்தில் நடித்துள்ள அடா சர்மா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இந்த படத்தை திரையிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் தமிழ்நாடு கேரளா தவிர மற்ற மாநிலங்களில் இந்த படத்துக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை அடா சர்மா தனது சமூக வலைத்தளத்தில் இந்த படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ’இந்தியர்கள் பலர் பாதிக்கப்பட்ட பிறகும் கூட ’தி கேரளா ஸ்டோரி’ என்ற படம் போலியானது என்று சிலர் சொல்கிறார்கள். ’தி கேரளா ஸ்டோரி’ படத்தை எதிர்ப்பவர்கள் தயவு செய்து ISIS மற்றும் Brides ஆகிய இரண்டு வார்த்தைகளை கூகுளில் தேடிப் பாருங்கள். சில ஆங்கில பெண்கள் சொல்வதைக் கேட்ட பிறகாவது இந்த படம் உண்மையானது என்று உங்களுக்கு புரியும் என்று தெரிவித்துள்ளார்.

அவரது இந்த ட்விட்டிற்கு ஏராளமான பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

More News

த்ரிஷாவின் பிறந்த நாள் தான் எனது மகனுக்கும் பிறந்த நாள்: பிரபல நடிகையின் வைரல் பதிவு..!

த்ரிஷாவின் பிறந்தநாள் தான் எனது மகனின் பிறந்த நாள் என பிரபல நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் பதிவு செய்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நாங்கள் வெகு தூரம் வந்துவிட்டோம்.. மனைவியுடன் 20 வருடங்களுக்கு முந்தைய ஆர்ஜே பாலாஜி புகைப்படம்..!

'20 வருடங்கள் நாங்கள் வெகு தூரம் வந்துவிட்டோம் என்று பெருமையாக சொல்லலாம்' என்று நடிகர் ஆர்ஜே பாலாஜி தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி

விஜய்யின் 'லியோ' படத்தில் இணைந்த 'த்ரிஷ்யம்' பட நடிகை.. வைரல் புகைப்படம்..!

 தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

பயங்கர விபத்தில் சிக்கிய 'பொன்னியின் செல்வன்' பாடகி.. என்ன ஆச்சு..?

'பொன்னியின் செல்வன்' உள்பட பல திரைப்படங்களில் பாடல்கள் பாடிய பாடகி சமீபத்தில் பயங்கர விபத்தில் சிக்கியதாகவும் ஆனால் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் பிழைத்ததாகவும் தனது சமூக

காதலனை கட்டிப்பிடித்து கொஞ்சும் ப்ரியா பவானி சங்கர்... வைரல் வீடியோ..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் தனது காதலனை கட்டிப்பிடித்து கொஞ்சம் வீடியோவை வெளியிட்டு உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.