படுக்கைக்கு அழைக்கும் வழக்கும் குறித்து நடிகை அடா சர்மா கூறியது என்ன?

  • IndiaGlitz, [Friday,April 27 2018]

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் குறித்து பல நடிகைகள் தைரியமாக கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கும் நிலையில் பிரபுதேவா நடித்து வரும் 'சார்லி சாப்ளின் 2' படத்தின் நாயகி அடாசர்மா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்

பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் சினிமாத்துறையில் மட்டுமின்றி அனைத்து துறையிலும் இருப்பதாகவும், ஆனால் இந்த துறையை மட்டும்தான் பூதக்கண்ணாடி போட்டு அனைவரும் பார்ப்பதாகவும் நடிகை அடாசர்மா தெரிவித்துள்ளார்.

இதுவரை தன்னை யாரும் படுக்கைக்கு அழைத்ததில்லை என்றும் திறமை இருந்தால் யாரையும் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அடாசர்மா கூறியுள்ளார்.

மேலும் மகள்களை பாதுகாப்பாக இருக்க அறிவுரை கூறும் பெற்றோர்கள், மகன்களிடம் பெண்ணை மதிக்க கற்று கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினால் நாட்டில் பாலியல் தொல்லையே இருக்காது என்று கூறியுள்ளார். படுக்கைக்கு அழைக்கும் கேவலமான புத்தியுள்ளவர்கள் நம்மை நெருங்காமல் பார்த்து கொண்டாலே இந்த பிரச்சனையில் இருந்து தப்பிவிடலாம் என்றும் நடிகை அடாசர்மா மேலும் கூறியுள்ளார்.