close
Choose your channels

ரஜினிக்கு மனைவியாக நடிக்கும் தனுஷுக்கு மனைவியாக நடித்த நடிகை.. அவரே சொன்ன தகவல்..!

Wednesday, July 31, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷுக்கு மனைவியாக நடித்த நடிகை தற்போது ரஜினிக்கு மனைவியாக நடித்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’அசுரன்’ என்ற திரைப்படத்தில் தனுஷ் மனைவியாக நடித்தவர் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். இந்த படத்தில் இருவரின் நடிப்பும் மிகவும் பிரமாதமாக இருந்தது என்பது தெரிந்தது.

இதனை அடுத்து அஜித்தின் ’துணிவு’ திரைப்படத்தில் நடித்த மஞ்சு வாரியர் தற்போது ரஜினியின் ’வேட்டையன்’ படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் அவர் ரஜினியின் மனைவியாக நடித்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை சமீபத்தில் மஞ்சு வாரியர் உறுதி செய்துள்ளார்.

மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடிக்கும் மலையாள திரைப்படமான ’புட்டேஜ்’ என்ற படத்தின் விளம்பர பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர்’வேட்டையன்’ திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்துள்ளதாக கூறியுள்ளார். எனவே தனுஷின் மனைவியாக நடித்த நடிகை ரஜினிக்கும் மனைவியாக நடித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ‘திருவிளையாடல் ஆரம்பம்’ என்ற படத்தில் தனுஷ் ஜோடியாக ஸ்ரேயா நடித்த நிலையில் அதே நேரத்தில் ’சிவாஜி’ படத்தில் ரஜினிக்கும் ஜோடியாக ஸ்ரேயா நடித்துக் கொண்டிருந்தார் என்பதும் இரண்டு படங்களும் சில மாத இடைவெளியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஜினி, தனுஷ் மட்டுமின்றி ’விடுதலை 2’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி மனைவியாகவும் மஞ்சுவாரியர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment