ரஜினிக்கு மனைவியாக நடிக்கும் தனுஷுக்கு மனைவியாக நடித்த நடிகை.. அவரே சொன்ன தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,July 31 2024]

தனுஷுக்கு மனைவியாக நடித்த நடிகை தற்போது ரஜினிக்கு மனைவியாக நடித்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’அசுரன்’ என்ற திரைப்படத்தில் தனுஷ் மனைவியாக நடித்தவர் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். இந்த படத்தில் இருவரின் நடிப்பும் மிகவும் பிரமாதமாக இருந்தது என்பது தெரிந்தது.

இதனை அடுத்து அஜித்தின் ’துணிவு’ திரைப்படத்தில் நடித்த மஞ்சு வாரியர் தற்போது ரஜினியின் ’வேட்டையன்’ படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் அவர் ரஜினியின் மனைவியாக நடித்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை சமீபத்தில் மஞ்சு வாரியர் உறுதி செய்துள்ளார்.

மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடிக்கும் மலையாள திரைப்படமான ’புட்டேஜ்’ என்ற படத்தின் விளம்பர பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர்’வேட்டையன்’ திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்துள்ளதாக கூறியுள்ளார். எனவே தனுஷின் மனைவியாக நடித்த நடிகை ரஜினிக்கும் மனைவியாக நடித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ‘திருவிளையாடல் ஆரம்பம்’ என்ற படத்தில் தனுஷ் ஜோடியாக ஸ்ரேயா நடித்த நிலையில் அதே நேரத்தில் ’சிவாஜி’ படத்தில் ரஜினிக்கும் ஜோடியாக ஸ்ரேயா நடித்துக் கொண்டிருந்தார் என்பதும் இரண்டு படங்களும் சில மாத இடைவெளியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஜினி, தனுஷ் மட்டுமின்றி ’விடுதலை 2’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி மனைவியாகவும் மஞ்சுவாரியர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

ரஜினி, அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? அடுத்த தளபதிக்கு தகுதியாகுகிறாரா?

தளபதி விஜய்யின் சில திரைப்படங்கள் அஜித் படங்கள் வெளியாகும் போது வெளியானது என்பதும் அதேபோல் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு தகுதியானவர் தளபதி விஜய் தான் என்றும் அவரது ரசிகர்கள்

ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' நாயகியின் புதிய போஸ்டர்.. இன்று என்ன விசேஷம்?

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நாயகியாக நடித்துள்ள கைரா அத்வானியின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ராமனுக்கு சீதை போல எனக்குன்னு வந்தா என் ஜெகதாம்பா.. 'ஜமா' டிரைலர்..!

வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி 'ஜமா' என்ற திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

விஷால் - லைகா இடையிலான வழக்கில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

லைகா நிறுவனத்தின் மீது நடிகர் விஷால் தாக்கல் செய்த வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ஜெயிலர் 2' படத்தில் நான் நடிக்கிறேன்.. முதல் பாகத்தில் நடித்த பிரபல நடிகர் தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்படுகிறது.