குத்துச்சண்டை வீராங்கனையாகும் கீதாஞ்சலி நாயகி
Send us your feedback to audioarticles@vaarta.com
கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸ் ஆன 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தின் நாயகி வாமிகா கபியின் நடிப்பு குறிப்பிட்டு பேசப்பட்டது.
பஞ்சாபை சேர்ந்த நடிகை வாமிகாவுக்கு தற்போது அடுத்த படம் புக் ஆகியுள்ளது. பிரபல மலையாள இயக்குனர் பசில் ஜோசப் இயக்கவுள்ள அடுத்த படமான 'கோதா' என்ற படத்தில் ஆதித்தி என்ற கேரக்டரில் நடிக்க வாமிகா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் வாமிகா குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்கவுள்ளாராம். சமீபத்தில் ரித்திகாசிங் 'இறுதிச்சுற்று' படத்தில் குத்து சண்டை வீராங்கனையாக நடித்த நிலையில் தற்போது வாமிகாவும் குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்காக வாமிகா குத்துச்சண்டை பயிற்சியாளர் ஒருவரிடம் பயிற்சி எடுத்து வருகின்றாராம். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout