உடலில் சேற்றை பூசிக்கொண்டு தோழிகளுடன் ஜாலியான ஆட்டம்.. பிரபல நடிகரின் மனைவி புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,May 09 2023]

பிரபல நடிகரின் மனைவி சமீபத்தில் ஜோர்டான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த நிலையில் அங்கு தனது தோழிகளுடன் உடலில் சேற்றை பூசிக் கொண்டு ஜாலியாக இருந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர் ஸ்ரீகாந்த். ‘ரோஜா கூட்டம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமான அவர் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பதும் ஒரு சில படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2008 ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவருடைய இன்ஸ்டா பக்கத்திற்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் வந்தனா தனது தோழிகளுடன் ஜோர்டான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த நிலையில் அங்குள்ள கடலில் அவர் சேற்றை உடலில் பூசிக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படங்களும் தோழிகளுடன் ஜாலியாக ஆட்டம் போடும் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.