புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசிக்கு உதவிய பிரபல நடிகர்கள்!

  • IndiaGlitz, [Tuesday,November 17 2020]

’கருப்பன் குசும்புக்காரன்’ என்ற வசனத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் தவசி கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறித்த செய்தியை நேற்று பார்த்தோம்

சிவகார்த்திகேயன், சூரி நடிப்பில் பொன்ராம் இயக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற படத்தில் பஞ்சாயத்து காட்சியில் கம்பீரமாக இரண்டு பக்க வசனத்தை ஒரே டேக்கில் பேசிய நடிகர் தவசி, தற்போது உடல் மெலிந்து பார்க்கவே மிகவும் சோகமாக காட்சி அளிக்கிறார்

அவரது சிகிச்சைக்கு திமுக எம்.எல்.ஏ சரவணன் அவர்கள் உதவி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் புற்று நோயால் நடிகர் தவசி பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 25 ஆயிரம் நிதி உதவியும், நடிகர் சூரி ரூபாய் 20 ஆயிரம் நிதி உதவியும் செய்துள்ளனர். மேலும் நிதி உதவி தேவை என்றால் தங்களை தாராளமாக கேட்கலாம் என தவசி குடும்பத்தினர்களுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் சூரி தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகர்களின் உதவியால் தற்போது தவசி தேறி வருவதாகவும் விரைவில் அவர் குணமாகி வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

More News

'சம்பவம் தரமா இருக்கு': 'வலிமை' அப்டேட் தந்தாரா எச்.வினோத்?

தல அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

கதாநாயகியாகும் விக்ரம் பட குழந்தை நட்சத்திரம்: முக்கிய கேரக்டரில் ப்ரியாமணி!

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'தெய்வத்திருமகள்' மற்றும் 'சைவம்' ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சாரா அர்ஜூன்.

காலத்தை கணிப்பது யார்? 45 மணி நேர விறுவிறுப்பான டாஸ்க்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 44 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 45வது நாள் என்பதால் 45 மணி நேர டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது

வாசன் ஐகேர் மருத்துவமனை அருண் மரணத்தில் மர்மமா? 

வாசன் ஐகேர் மருத்துவமனைகளின் உரிமையாளர் அருண் அவர்கள் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக இறந்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு வயது 51 

கணவர், குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய ரோஜா: அசத்தும் புகைப்படங்கள்!

கடந்த 1992ஆம் ஆண்டு 'செம்பருத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை ரோஜா அதன் பின்னர் 'சூரியன்' 'உழைப்பாளி' 'வீரா' 'ராஜமுத்திரை' 'அசுரன்' 'மக்களாட்சி'