இனிமேல் அரசியலுக்கு வரும் நடிகர்கள் தோல்வியடைவார்கள்: திருமுருகன் காந்தி

  • IndiaGlitz, [Sunday,September 24 2017]

உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், விஷால் உள்பட திரைநட்சத்திரங்கள் பலர் மிக விரைவில் அரசியல் களம் புகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் கமல்ஹாசன் முந்திவிடுவார் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் என்ற அடையாளத்தை மட்டும் வைத்து கொண்டு எந்த வித போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் அரசியலுக்கு வருபவர்களை சீமான் உள்பட பல அரசியல்வாதிகள் கண்டித்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நடிகர்களின் அரசியல் குறித்து கூறியபோது, 'நடிகர்கள் என்ற அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலுக்கு வந்தால் நடிகர்கள் தோல்வியடைவார்கள். மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மக்கள் வாய்ப்பளிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

More News

விஜய்சேதுபதியின் 'கருப்பன்' திரைமுன்னோட்டம்

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சென்னை மெரீனாவில் நடத்திய உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றதில் இருந்தே தமிழ் திரையுலகினர்களின் பார்வை ஜல்லிக்கட்டு பக்கம் திரும்பியுள்ளது.

நொய்யல் ஆற்றின் நுரைக்கு மக்கள் சோப்பு போட்டு குளிப்பதே காரணம்: தமிழக அமைச்சர்

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன், பொதுமக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதற்கு காரணம் என்று கூறியுள்ளது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்': திரை முன்னோட்டம்

இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராகிய ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அடுத்த படம் ஸ்பைடர்'. நம்மூர் விஜய்க்கு சமமாக தெலுங்கில் பிரபலமான மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம்

'இமைக்கா நொடிகள்' சிங்கிள் டிராக் ரிலீஸ் எப்போது?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன்களை ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

'பாகுபலி'யுடன் கனெக்சன் ஆகும் மகேஷ்பாபு

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படம் என்னவாக இருக்கும், அவரது படத்தில் ஹீரோவாக நடிக்க கொடுத்து வைத்திருக்கும் நாயகன் யார்? என்ற கேள்விகள் கடந்த சில மாதங்களாக எழுந்து கொண்டிருக்கும் நிலையில்