மீண்டும் நடிகர் சங்க தேர்தலா? அமைச்சரின் பேச்சால் பரபரப்பு
- IndiaGlitz, [Friday,December 13 2019]
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் சம்மந்தப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் உள்ளது
தேர்தல் நடந்து முடிந்து ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் இருக்கும் நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற 17வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் பேசியதாவது: அரசு வேறு சினிமா வேறு என்று நாங்கள் நினைப்பதில்லை. காரணம் எங்கள் அரசு கலைத்துறையை சார்ந்த அரசு. எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா போன்று முதல்வர் எடப்பாடியும் திரைத்துறைக்கு உறுதுணையாக இருக்கிறார். நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டால் மறுதேர்தல் நடத்த அரசு தயாராக உள்ளது” என்றார்
இந்த நிகழ்ச்சியில் கே.பாக்யராஜ், பா.ரஞ்சித், மனோபாலா உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் 90 வயதான நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை அமைச்சர் வழங்கினார்.