யோகிபாபு மகனை மடியில் வைத்து கொஞ்சிய பிரபல நடிகை: ஸ்பெஷல் நாளில் வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Sunday,July 24 2022]

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு அவ்வப்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த படங்களில் ஒன்றான ’மண்டேலா’ இரண்டு தேசிய விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யோகி பாபு நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் நேரிலும் தொலைபேசியிலும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகை சஞ்சனா சிங், யோகி பாபு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நேரில் கலந்து கொண்டார். மேலும் அவரது மகனை தனது மடியில் தூக்கி வைத்து கொஞ்சிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

யோகிபாபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய சஞ்சனா சிங், ‘உங்களின் பிறந்தநாள் விழாவில் என்னை அழைத்ததற்கு மிகவும் நன்றி. இந்த நாளில் உங்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்க என்னுடைய நல்வாழ்த்துக்கள். நீங்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க கடவுள் ஆசீர்வதிப்பார்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.