ராமராஜ் காட்டன் நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிடரான பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தின் ராமராஜ் காட்டன் நிறுவனத்திற்கு பிரபல நடிகர் யாஷ் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதுகுறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராக்கிங் ஸ்டார் யாஷ் அவர்களின் உடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறது ராம்ராஜ் காட்டன். ஆம், ராம்ராஜ் காட்டன் புதிய இந்திய பிராண்ட் அம்பாசிடராக இனி யாஷ் செயல்பட இருக்கிறார். பல்திறன் தனித்துவமும் கொண்ட தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டுள்ள திறமையான நட்சத்திரம் யாஷ் .அவர் ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல உதவும் உள்ளம் படைத்தவர். அதோடு உத்தியோகத்தின் சின்னமாக திகழ்பவர்
வேட்டிகள், சட்டைகள், உள்ளாடைகள், பின்னலாடைகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆடைகள் ஆகியவற்றின் உற்பத்தி வினியோகம், ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ராமராஜ் காட்டன். இது ஒரு உள்நாட்டு சுதேசி பிராண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. ராமராஜ் காட்டன் ஜவுளி தொழிற்சாலை அதன் கலாச்சாரம், பாரம்பரியம், புதுமைகள் மற்றும் தயாரிப்பு தொழில் நுட்பங்களுடன் சேர்த்து நாள்தோறும் மேம்படுத்தி வருகிறது. மிகப்பிரம்மாண்டமான கனவுகளை நனவாக்கும் திறன் படைத்த தொலைநோக்கு பார்வையாளர்கதிரு கே ஆர் நாகராஜனின் முன்னெடுப்பில் அடித்தளத்திலிருந்து படிப்படியாக வளர்ந்து ஒரு பேரரசாக உருவெடுத்துள்ள நிறுவனம்தான் ராமராஜ் காட்டன்.
ஒரு புதுமையான பிராண்ட் மற்றும் மார்க்கெட்டில் லீடர் என்ற முறையில் ராமராஜ் காட்டன் வேட்டி மீதான பார்வையை மாற்றி அதை வியக்கவைக்கும் உயரத்துக்கு உயர்த்தி உள்ளது. நெசவாளர்களின் முன்னேற்றமும் நல்வாழ்வும் தான் ராமராஜ் காட்டன் நிறுவனத்தின் அடித்தளம். இன்று 50 ஆயிரத்துக்கும் அதிகமான நெசவாளர் குடும்பங்கள் ராமராஜ் பிராண்டு உடன் தொடர்புடையவை. அது மட்டுமல்ல இந்தியா முழுவதும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பையும் ராமராஜ் காட்டன் உருவாக்கியுள்ளது.
ராம்ராஜ் குடும்பத்தில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் ராக்கிங் ஸ்டார் யாஷ் . இவர் ஒரு ஐகானாகவும் பலருக்கு உற்சாகமாகவும் இருக்கும் சூப்பர் ஸ்டார். ராம்ராஜ் காட்டன் வெற்றிக்கு இணையானது யாஷ் அவர்கள் திரையுலகில் வளர்ந்த கதையும். எந்த சூழ்நிலையிலும், இந்த ஒருபோதும் தன் கனவை கைவிடாமல், மிகச்சரியான ரோல் மாடல் யாஷ். 17 ஆண்டுகால நடிப்பு வாழ்க்கையில் அவர் நாடகம், தொலைக்காட்சி, திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரம் என பலவிதங்களில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார். கேஜிஎப் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமாவில் மிகவும் நம்பகமான சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான உயர்ந்திருக்கிறார். அவரது ஆளுமையும் வசீகரமும் கோடிக்கணக்கான இதயங்களைக் வந்த பிறகும் கூட அவர் தனது வேர்களை ஒருபோதும் மறந்துவிட வில்லை.
ஒரு வெற்றிகரமான நடிகர் என்பதை தாண்டி ஒரு சிறந்த மனிதர். யாஷோமார்கா அறக்கட்டளை வாயிலாக சமூகத்துக்கான தன் பங்களிப்பை திரும்ப செலுத்துகிறார். யாஷ் மற்றும் அவரின் மனைவி ராதிகா பண்டிட் தொடங்கியுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் இது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமங்களில் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ராக்கிங் ஸ்டார் யாஷ் தனது பிராண்ட் அம்பாசிடராக இருப்பதில் ராம்ராஜ் காட்டன் பெருமை கொள்கிறது. யாஷ் போன்ற எழுச்சியூட்டும் ஆளுமை பிராண்டின் சரியான முகமாக விளங்குவார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் தனது கனவை, கடின உழைப்பு ஆர்வம் மற்றும் விருப்பத்துடன் வெற்றிகரமாக நிறைவேற்றினார். அதேநேரத்தில் சமூகத்திற்கு பெரிய அளவில் திருப்பித் தருகிறார். அதனால் ராமராஜ் காட்டன் நிறுவனம் தன்னை போன்ற சிந்தனை உடைய ஒரு சூப்பர் ஸ்டாருடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறது. சமூக முன்னேற்றத்தை ஆதரிக்கும் அவரது உன்னத நோக்கங்களுடன் நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தையும் முன்னேற்றத்தையும் மேம்படுத்துவதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் முடியும்.
இந்த ஒருங்கிணைப்பின் வாயிலாக இந்திய பேஷன் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். ராம்ராஜ் வேட்டியை நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் எடுத்துச் செல்வதன் மூலம் இந்திய பாரம்பரியம் தொடர்வதை என்றும் உறுதி செய்வோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments