வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் பிரபல நடிகர்: 'தளபதி 67' படத்திற்கு தயாராகிறாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 67வது படமான ’தளபதி 67’ படம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இந்த படத்தில் ஏற்கனவே சஞ்சய் தத், கவுதம் மேனன், விஷால், மிஷ்கின், நிவின் பாலி, த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்பட பல பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மன்சூர் அலி கான் நடிக்க இருப்பதாகவும் மன்சூர் அலிகானை அடுத்த படத்தில் பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது மன்சூர் அலிகான் வெறித்தனமாக உடலை குறைக்கும் வகையில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘தளபதி 67’ உள்பட மீண்டும் தமிழ் சினிமாவில் பிசியாகும் மன்சூர்அலிகான் தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஒர்க்கவுட் செய்து வருவதாக தெரிகிறது. இந்த வீடியோவை எடுத்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
புதிய படங்களுக்கு அதிரடியாக தயாராகி வருகிறார் நடிகர் மன்சூர் அலிகான்!
— PRO Winsun (@Winsun_PRO) November 13, 2022
PRO_கோவிந்தராஜ்@GovindarajPro pic.twitter.com/77L6skH1rV
புதிய படங்களுக்கு அதிரடியாக தயாராகி வருகிறார் நடிகர் #மன்சூர்அலிகான்#mansooralikhan@GovindarajPro pic.twitter.com/fuz1dUZKN3
— Xavier Journalist (@XavierMariabell) November 13, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments