விருது வாங்கியபோது திடீரென தொகுப்பாளர் கன்னத்தில் அறைந்த வில்ஸ்மித்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்கார் விருதை வாங்க மேடைக்கு சென்ற நடிகர் வில் ஸ்மித் திடீரென தொகுப்பாளர் கன்னத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விருது வழங்கும் விழாவின் போது சிறந்த ஆவண படத்திற்கான விருதை வழங்க கிறிஸ் ராக் மேடைக்கு வந்தார். அப்போது அவர் வில்ஸ்மித் மனைவி தலைமுடி குறித்து கிண்டலடித்தார்.
வில்ஸ்மித் மனைவி அலோபெசியா என்ற தொற்று காரணமாக முடியை முற்றிலும் இழந்த நிலையில் அவரது மொட்டைத்தலை கிறிஸ் ராக் கேலி செய்ததால் வில் ஸ்மித் கோபமடைந்து கிறிஸ் ராக்கை திட்டினார்.
இந்த நிலையில் கிங் ரிச்சர்ட் என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது வில்ஸ்மித்துக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த விருதை வாங்க மேடைக்கு சென்ற வில் ஸ்மித்,. திடீரென தனது மனைவியை கிண்டல் செய்த தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
VIA JAPANESE TELEVISION: The uncensored exchange between Will Smith and Chris Rock pic.twitter.com/j0Z184ZyXa
— Timothy Burke (@bubbaprog) March 28, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments