234 தொகுதிகள், 6000 பேர்.. சென்னையில் விஜய் நடத்தும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 6000 நபர்களை வரவழைத்து பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்த விஜய் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தேர்வில் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை அழைத்து நடிகர் விஜய் பரிசளிக்கப் போவதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த பரிசளிப்பு விழா மதுரையில் நடைபெறும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது சென்னை மதுரவாயல் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. 234 தொகுதிகளில் இருந்து 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் அவர்களுடன் பெற்றோர்களையும் அழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்திலிருந்து மொத்தம் 6000 பெயர்களை வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்காக மண்டபம் புக் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் பெற்றோரை இழந்த நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளின் உயர் படிப்பிற்கான செலவையும் விஜய் ஏற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments