சம்பளமே வேண்டாம்.. தினமும் 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் பிரபல நடிகர் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தினமும் இரண்டு கோடி சம்பளம் வாங்கும் நடிகர் ஒருவர் தனக்கு சம்பளமே வேண்டாம் என திடீரென அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண் என்பதும் இவர் ஒரு படத்திற்கு 30 முதல் 35 நாட்கள் மட்டுமே கால் சீட் தருவதாகவும் அவருக்கு 70 கோடி ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால் இவருக்கு தினமும் 2 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நல்ல வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர் துணை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் அவர் தனது சம்பளத்தை வாங்க சென்றபோது அவருக்கு 35 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் தான் மூன்று நாள் மட்டும் தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ளதாகவும் அதனால் சம்பளம் வேண்டாம் என்றும் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆந்திர மாநிலத்தில் நிதி நிலைமையை பார்க்கும்போது எனக்கு சம்பளம் வாங்கவே மனம் வரவில்லை என்றும் இனிமேல் சம்பளம் வாங்க மாட்டேன் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட சம்பளம் வாங்காமல் பெயருக்கு ஒரே ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com