சம்பளமே வேண்டாம்.. தினமும் 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் பிரபல நடிகர் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,July 02 2024]

தினமும் இரண்டு கோடி சம்பளம் வாங்கும் நடிகர் ஒருவர் தனக்கு சம்பளமே வேண்டாம் என திடீரென அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண் என்பதும் இவர் ஒரு படத்திற்கு 30 முதல் 35 நாட்கள் மட்டுமே கால் சீட் தருவதாகவும் அவருக்கு 70 கோடி ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால் இவருக்கு தினமும் 2 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நல்ல வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர் துணை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் அவர் தனது சம்பளத்தை வாங்க சென்றபோது அவருக்கு 35 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் தான் மூன்று நாள் மட்டும் தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ளதாகவும் அதனால் சம்பளம் வேண்டாம் என்றும் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆந்திர மாநிலத்தில் நிதி நிலைமையை பார்க்கும்போது எனக்கு சம்பளம் வாங்கவே மனம் வரவில்லை என்றும் இனிமேல் சம்பளம் வாங்க மாட்டேன் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட சம்பளம் வாங்காமல் பெயருக்கு ஒரே ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் சேதுபதி - பாண்டிராஜ் படத்தின் நாயகி இந்த பிரபலமா? அப்ப சம்பவம் இருக்கு..!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நாயகி குறித்த

போட்டி போட்டு அப்டேட் கொடுக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்கள்.. இன்று என்ன தெரியுமா?

தனுஷ் நடித்து இயக்கி உள்ள 'ராயன்' படத்தின் அப்டேட்டுகள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது 'குபேரா'

ஆகஸ்ட் ரிலீஸ் பட்டியலில் இணைந்த இன்னொரு பிரபலத்தின் படம்.. த்ரிலுக்கு கேரண்டி..!

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 8 பிரபலங்களின் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இன்னொரு பிரபலத்தின் படமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்னும் 100 நாள் தான்.. 'கங்குவா' படக்குழு வெளியிட்ட மாஸ் வீடியோ வைரல்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள மாஸ் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்திரஜா ரோபோ சங்கர் கர்ப்பமா? மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் சொன்ன குட் நியூஸ்..!

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திரஜா  ரோபோ சங்கர் தனக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்பது குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.