இன்று மாலையளவில் மறைந்த நடிகர் விவேக்கின் உடல் தகனம்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நகைச்சுவை நடிகர் விவேக்.அண்மையில் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விவேக், மக்களிடம் தடுப்பு மருந்தை போட்டுக்கொள்ளுமாறு அறிவுரையும் செய்தார். கொரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பு மருந்தின் முக்கியத்துவம் குறித்து கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். விவேக் அவர்களுக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை காலை காலமானார்.
இந்நிலையில் அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இன்று மாலை விருகம்பாக்கம் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட இருப்பதாக, குடும்ப உறுப்பினர்கள் சார்பாக கூறப்பட்டுள்ளது. மறைந்த சின்னக்கலைவாணரான விவேக்-கின் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவேண்டும் என தமிழக அரசு, தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments