தமிழக முதல்வரை சந்தித்த விவேக் மனைவி: முக்கிய கோரிக்கை

  • IndiaGlitz, [Monday,April 25 2022]

மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவி தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்த நடிகர் விவேக், கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவரது ஒரு வருட நினைவஞ்சலி சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில் நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி சந்தித்தார். நடிகர் விவேக் அவர்கள் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு விவேக் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை அவர் முதல்வரிடம் அளித்தார்.

முதல்வருடனான இந்த சந்திப்பின்போது விவேக் மகள் அமிர்தா நந்தினி மற்றும் விவேக் பசுமை இயக்கத்தின் நிர்வாகிகள் முருகன், லாரன்ஸ், அசோக் ஆகியோர் உடன் இருந்தனர். விவேக் மனைவியின் கோரிக்கை ஏற்கப்பட்டு அவர் வாழ்ந்த வீடு உள்ள சாலைக்கு அவரது பெயர் வைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'படையப்பா'வுக்கு பின்னர் மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபலம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'படையப்பா' திரைப்படத்தில் நீலாம்பரி என்ற முக்கிய கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார் என்பது அந்த படம் அவருக்கு மிகப் பெரிய புகழை பெற்றுத் தந்தது என்பது

சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் சூர்யா: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுதா கொங்கரா இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சூர்யா நடிப்பாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் சுதாகொங்க்ரா இயக்கவிருக்கும் 'சூரரைப்போற்று'  திரைப் படத்தின் இந்தி ரீமேக் படத்தை

14 வயது பள்ளிச்சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சினிமா குரூப் டான்சர்கள் 3 பேர் கைது!

 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 3 சினிமா குரூப் டான்ஸர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

பிரபல நடிகருக்கு அட்ஜெஸ்ட்மெண்ட்: இஷா கோபிகர் கூறிய திடுக்கிடும் தகவல்

தமிழ் திரையுலக நடிகைகளில் ஒருவரான இஷா கோபிகர், பிரபல நடிகர் ஒருவர் தன்னை அட்ஜஸ்ட் செய்ய சொல்லியதாக கூறிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

காத்துவாக்குல ரெண்டு காதல்' சென்சார் தகவல்: யாரெல்லாம் இந்த படத்தை பார்க்க முடியாது?

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'.