அனிதாவின் அவசரம் முன்னுதாரணம் அல்ல: நடிகர் விவேக்
Send us your feedback to audioarticles@vaarta.com
அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று பல கோலிவுட் பிரபலங்கள் ஆவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இன்னொரு மரணம் நிகழ்ந்துவிட கூடாது என்றும் மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டு எந்த தவறான முடிவையும் எடுத்துவிட வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில், 'அனிதாவின் அவசரம் பிற மாணவர்களுக்கு முன்னுதாரணம் அல்ல என்றும் கனவு நிறைவேறாவிட்டால் தற்கொலையா? விமான ஓட்டி கனவு நிறைவேறாதவர்தான் அப்துல்கலாம்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அனிதாவின் சோகமுடிவு குறித்து அவர் குறிப்பிடுகையில், உன் குடும்பத்தை தேற்ற எனக்கு வழி தெரியவில்லை சகோதரி. ஆயினும் உன் வலி புரிகிறது. எனினும் தற்கொலை எப்படியம்மா தீர்வாகும்? என்றும், இதற்கு மேல் என்ன படிக்க? ஒரு அருமை மாணவியை, அன்பு மகளை, எதிர்கால மருத்துவரை தமிழகம் இழந்துவிட்டது என்றும் விவேக கூறியுள்ளார்.
அனிதாவின் அவசரம் பிற மாணவர்களுக்குமுன்னுதாரணம் அல்ல.கனவு நிறைவேறாவிட்டால் தற்கொலையா?"விமானஓட்டி"கனவு நிறைவேறாதவர்தான் கலாம்.@PTTVOnlineNews
— Vivekh actor (@Actor_Vivek) September 2, 2017
இதற்கு மேல் என்ன படிக்க?ஒரு அருமை மாணவியை,அன்பு மகளை,எதிர்கால மருத்துவரை தமிழகம் இழந்துவிட்டது. RIP Anitha
— Vivekh actor (@Actor_Vivek) September 1, 2017
உன் குடும்பத்தை தேற்ற எனக்கு வழி தெரியவில்லை சகோதரி.ஆயினும் உன் வலி புரிகிறது.எனினும் தற்கொலை எப்படியம்மா தீர்வாகும்?
— Vivekh actor (@Actor_Vivek) September 1, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout