முத்து நகரா? மூச்சு திணறும் நகரா? ஸ்டெர்லைட் குறித்து பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Monday,March 26 2018]

ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று தூத்துக்குடி பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆலையின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டோடு முடிகிறது. ஆனால் மத்திய அரசு இந்த ஆலையின் ஒப்பந்தத்தை நீடித்ததோடு, புதிய ஆலைக்கும் அனுமதி கொடுத்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தூத்துக்குடி பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தற்போது கல்லூரி மாணவர்களும் ஆதரவு கொடுத்துள்ளதால் இந்த போராட்டம் ஒரு மினி மெரீனா போராட்டம் போல் மாறியுள்ளது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சுற்றுச்சுழல் குறித்து அவ்வப்போது பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வைத்து கொண்டிருக்கும் நடிகர் விவேக், ஸ்டெர்லைட் ஆலை குறித்து தனது சமூக  வலைத்தளத்தில்  கூறியதாவது: ஸ்டெர்லைட் பற்றி படிக்கப் படிக்க அதிர்ச்சியாக உள்ளது. எவ்வளவு உயிர் கொல்லி நச்சுக் கழிவுகள் மண்ணிலும் நீரிலும் காற்றிலும் இதுவரை கலந்தனவோ தெரியவில்லையே? அரசு கருணை மனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் மன்றாடி கேட்கிறேன். அது முத்து நகர்; மூச்சுத் திணறும் நகர் அல்ல' என்று கூறியுள்ளார். விவேக்கின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

More News

சென்னை சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் தீவிபத்து

சென்னையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணா சாலையில் உள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டிரைக்கை மீறி ரிலீஸ் ஆகிறதா நயன்தாரா படம்?

இதுவரை இல்லாத வகையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே வேலைநிறுத்தத்தில் கடந்த ஒரு மாதமாக வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய படங்கள் ரிலீஸ் இல்லை

பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு இன்று திருமணம்

கோலிவுட் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவராகிய முனிஷ்காந்த்துக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.

வெற்றிடம் குறித்து அறிவியல்பூர்வ விளக்கம் அளித்த ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நலம் காரணமாக தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிச்சலோ இல்லாத அரசு: கமல்ஹாசன் காட்டம்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில்