மாணவர்களின் எதிர்கால எதிரி இதுதான்: நடிகர் விவேக்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவர் ஒரு மாணவரை கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் பட்டப்பகலில் நடுரோட்டில் தாக்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் இணையதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இரு மாணவர்களையும் இன்று அக்கல்லூரியின் முதல்வர் அருண் மொழிசெல்வன் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'மாணவர்கள் கையில் பட்டாகத்தி. கண்டோர் அச்சத்திலும் அதிர்ச்சியிலும். இந்த வயதில் காதல் வந்தால் அது இதயத்தை மென்மை ஆக்கும்; கல்வி பயின்றால் அது வாழ்வை மேன்மை ஆக்கும். ஆனால் கையில் ஆயுதம் எடுத்தால் எதிர்காலமே உனக்கு எதிரி ஆகிவிடும் என்று கூறியுள்ளார்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது இதுமுதல் முறை அல்ல. கடந்த சில நாட்களுக்கு முன் 'பஸ் டே' என்ற பெயரில் அக்கல்லூரி மாணவர்கள் செய்த அட்டகாசத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது தெரிந்ததே. வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது
#BREAKING: சென்னை அருகம்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பு கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டதில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு. #PachaiyappaCollege #Students #Chennai pic.twitter.com/PRRI67xrIZ
— FX16 News (@fx16news) July 23, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout