சாத்தான் குளம் வற்றலாம்! ஆனால் நீதிக்குளம் வற்றக்கூடாது: பிரபல நடிகரின் டுவீட்
- IndiaGlitz, [Saturday,June 27 2020]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் என்ற பகுதியில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகியோர் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட சில நிமிடங்கள் அதிக நேரம் கடை திறந்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இருவரும் காவல்துறையினர்களின் கொடூர தாக்குதலுக்கு படுகாயம் அடைந்து அதன்பின்னர் மரணம் அடைந்தனர். இந்த செய்தி தமிழகத்தை மட்டுமின்றி பெரும் இந்தியாவையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது
இந்த நிலையில் இந்த விவகாரத்திற்கு முதல் முறையாக மாஸ் நடிகர்கள் தவிர திரையுலகை சேர்ந்த பலரும் தைரியமாக குரல் கொடுத்து வருகின்றனர். ஒட்டுமொத்த திரையுலகினர்களும் இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளதால் நாடு முழுவதும் இந்த விஷயம் பரவி, ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு இணையான ஒன்றாக பேசப்பட்டு வருகிறது
இந்த நிலையில் நடிகர் விவேக் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஒரு குறைந்த பட்ச குற்றத்துக்கு, மரணம் தான் தண்டனையா? தங்கள் குடும்பம் , தங்கள் உயிர் பற்றி கவலை கொள்ளாமல், இந்த கொரொனா காலத்தில் கடமை ஆற்றும் காவல் துறைக்கு இந்த களங்கம் வரலாமா? சாத்தான் குளம் வற்றலாம்! ஆனால் நீதிக்குளம் வற்றக்கூடாது’ என்று பதிவு செய்துள்ளார். விவேக்கின் இந்த பதிவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது
ஒரு குறைந்த பட்ச குற்றத்துக்கு, மரணம் தான் தண்டனையா? தங்கள் குடும்பம் , தங்கள் உயிர் பற்றி கவலை கொள்ளாமல், இந்த கொரொனா காலத்தில் கடமை ஆற்றும் காவல் துறைக்கு இந்த களங்கம் வரலாமா? சாத்தான் குளம் வற்றலாம்! ஆனால் நீதிக்குளம் வற்றக்கூடாது.
— Vivekh actor (@Actor_Vivek) June 27, 2020