மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை: பிரபல நடிகரின் அசத்தல் டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து மட்டுமின்றி இந்தியாவின் பல நகரங்களில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சென்னைக்கு இலட்சக்கணக்கானோர் குடிவந்து நல்ல வேலையும் வருமானமும் பெற்று குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வட இந்தியாவில் இருந்து வந்த பலர் சென்னையில் தொழில் செய்து லட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர்களாகவும் மாறியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் சென்னையில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து சென்னையில் இருந்து உயிருடன் தப்பித்தால் போதும் என்று பலர் குடும்பத்துடன் மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊரை நோக்கி சென்று கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல நகரங்களில் சென்னையை சேர்ந்தவர்கள் உள்ளே வரவேண்டாம் என்று கூறும் அளவுக்கு சென்னையில் நிலைமை இன்று பரிதாபமாக உள்ளது
இந்த நிலையில் வந்தாரை வாழவைக்கும் சென்னை குறித்து பிரபல காமெடி நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: எல்லோரும் கழிவிரக்கம், அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள். பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர். தலைநகர்! பல மொழி, இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை. அது மீளும்; வாழும்!
நடிகர் விவேக்கின் இந்த டுவிட்டுக்கு பெரும்பாலான சென்னை மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
எல்லோரும் கழிவிரக்கம்,அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள்.பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர்.தலைநகர்!பல மொழி,இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை.அது மீளும்;வாழும்!??
— Vivekh actor (@Actor_Vivek) June 15, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments