மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை: பிரபல நடிகரின் அசத்தல் டுவிட்

  • IndiaGlitz, [Tuesday,June 16 2020]

தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து மட்டுமின்றி இந்தியாவின் பல நகரங்களில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சென்னைக்கு இலட்சக்கணக்கானோர் குடிவந்து நல்ல வேலையும் வருமானமும் பெற்று குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வட இந்தியாவில் இருந்து வந்த பலர் சென்னையில் தொழில் செய்து லட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர்களாகவும் மாறியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் சென்னையில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து சென்னையில் இருந்து உயிருடன் தப்பித்தால் போதும் என்று பலர் குடும்பத்துடன் மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊரை நோக்கி சென்று கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல நகரங்களில் சென்னையை சேர்ந்தவர்கள் உள்ளே வரவேண்டாம் என்று கூறும் அளவுக்கு சென்னையில் நிலைமை இன்று பரிதாபமாக உள்ளது

இந்த நிலையில் வந்தாரை வாழவைக்கும் சென்னை குறித்து பிரபல காமெடி நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: எல்லோரும் கழிவிரக்கம், அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள். பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர். தலைநகர்! பல மொழி, இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை. அது மீளும்; வாழும்!

நடிகர் விவேக்கின் இந்த டுவிட்டுக்கு பெரும்பாலான சென்னை மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

டிக்டாக் காதலி, இன்ஸ்டாகிராம் காதலன், பேஸ்புக் நண்பர்: 18 வயது காதலர்களால் பரபரப்பு

டிக் டாக்கில் பிரபலமான 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், இன்ஸ்டாகிராமில் பழக்கமான ஒரு இளைஞருடன் காதல் கொண்டதாகவும்

15 வயது சிறுமியின் குளிக்கும் வீடியோ: மிரட்டிய 3 இளைஞர்களால் ஏற்பட்ட விபரீதம்

15 வயது பள்ளி சிறுமியை குளிக்கும்போது வீடியோ எடுத்து மூன்று இளைஞர்கள் மிரட்டியதால் ஏற்பட்ட விபரீத சம்பவம் ஒன்று வேலூர் அருகே நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை புத்தகத்தை ஆர்டர் செய்த நபருக்கு அமேசான் கொடுத்த அதிர்ச்சி!!!

ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும்போது சில தவறுகள் நடப்பது சகஜம்தான். ஆனால் அமேசான் இப்படி விஷமத்தில் ஈடுபட்டு இருக்கக்கூடாது

விட்ட குறை தொட்ட குறையே இருக்கக்கூடாது: அனைவருக்கும் பண்ணிடுங்க... அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு!!!

டெல்லியில் கொரோனா நோய்த்தொற்று அசாதாரணமான நிலையை ஏற்படுத்தி இருப்பதாகச் தகவல்கள் தெரிவிக்கின்றன.

AC யில இருந்தா கொரோனா வருமா??? அதிர்ச்சியை ஏற்படுத்தும் புது தகவல்!!!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் ஊரடங்கு விதிமுறைகள் கட்டாயப்படுத்தப் பட்டு வருகின்றன.