வெற்றிடம் இருப்பது உண்மைதான், ஒப்புக்கொள்கிறேன்: நடிகர் விவேக்

  • IndiaGlitz, [Friday,November 29 2019]

கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் காலத்தில் பிறர் மனதை புண்படுத்தாத வகையில் உண்மையான நகைச்சுவை காட்சிகள் இருந்தன. ஆனால் தற்போது உருவத்தை கேலி செய்தும், பிறர் மனதை புண்படுத்தும் காமெடிகள் இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து நடிகர் விவேக் கூறியதாவது:

கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் அவர்கள் கடந்த 1940 முதல் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் ஆளுமையுள்ள ஒரு காமெடி நடிகராக இருந்தார். அவர் இந்தியாவின் சார்லி சாப்ளின் என்று போற்றப்படுகிறார். அவருஐய காமெடியில் தீண்டாமை ஒழிப்பு, ஜாதி கொடுமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஒழிப்பு போன்ற பல சமூக கருத்துக்களை அடங்கியிருந்தது. மேலும் மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல் மிக மென்மையான கருத்துக்களை கூறியவர் கலைவாணர் அவர்கள்.

ஆனால் அதே முறையையே அனைத்து காமெடி நடிகர்களும் பின்பற்றினால் அவரைப்பார்த்து காப்பி அடிப்பது போல் ஆகிவிடும். எனவே காமெடி நடிகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியை கையாள்கின்றனர். கவுண்டமணி, வடிவேலு, நான் உள்பட காமெடியில் ஓரளவு கருத்துக்களும் இருக்கும்.

இருப்பினும் தற்போதைய சினிமாவில் காமெடிக்கு வெற்றிடம் இருப்பது உண்மை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்கு காரணம் தற்போது படங்களின் நீளம் குறைந்துவிட்டது. காமெடி டிராக் என்பதே தற்போது இல்லை. மீண்டும் காமெடி டிராக் கொண்டு வந்தால் வெற்றிடம் நிரப்பப்படும் என்று விவேக் கூறினார்.