பயம் வரணும்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை குறித்து நடிகர் விவேக்
- IndiaGlitz, [Saturday,October 26 2019]
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 2 வயது சுர்ஜித் என்ற குழந்தை நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டது
இந்த குழந்தையை மீட்க கடந்த 17 மணி நேரமாக மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர் காவல் துறையினர் போராடி வருகின்றனர். பல்வேறு முயற்சிகள் எடுத்த போதிலும் இன்னும் குழந்தையை மீட்க முடியாமல் மீட்பு பணியினர் திணறி வருகின்றனர்
இந்த நிலையில் இந்த ஒரு சம்பவத்திற்கு பொதுமக்களின் அலட்சியமே காரணம் என நடிகர் விவேக் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: குழந்தையை எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால் யாரோ சிலருடைய பொறுப்பில்லாத செயலினால் ஒரு குழந்தையும் அதன் பெற்றோர்களும் எப்படிப்பட்ட மன வேதனை அடைகிறது என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும்
இனியும் இது தொடரக்கூடாது. போர்வெல் போடும் போது அதை மிகுந்த கவனத்துடன் விதிமுறைகளுக்கு உட்பட்டு போடவேண்டும். அரைகுறையாக போர்வெல் போடப்பட்டிருந்தால் அதனை மூடி வைக்க வேண்டும். போர்வெல் போடுவதற்கான விதிமுறைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும்
மேலும் குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர்கள் அந்த குழந்தையின் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். ஆபத்தான இடத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது
இந்த ஒரு சம்பவத்தினால் அரசுக்கு எவ்வளவு கஷ்டம் ஏற்பட்டுள்ளது. மீட்பு படையினர் பல மணி நேரங்களாக டென்ஷனுடன் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். குழந்தையின் பெற்றோர்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். இதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் போர்வெல் போடுவதற்கான சட்டங்கள் கடுமையாக ஏற்றவேண்டும்
மேலும் இதுபோன்ற தவறுகள் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும். சட்டங்களால்தான் பயம் வரும். பயம் வந்தால்தான் நம் சமுதாயத்தில் எதையு சாதிக்க முடியும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்
சுர்ஜித் மீண்டு வரவேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்ரதை அலட்சியம் இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு.
— Vivekh actor (@Actor_Vivek) October 26, 2019
அலட்சியமே குழந்தை சுர்ஜித் ஆழ்துளையில் விழக் காரணம் என நடிகர் விவேக் கூறியுள்ளார்.#SunNewsSocial #SunNews #child #children #Accident #BoreWell #Deepwell #SaveSujith #Sujith #Vivek #VivekLatest #ComeBackSujith #PrayForSujith pic.twitter.com/LP6c1bXZo0
— Sun News (@sunnewstamil) October 26, 2019