இதை டிரெண்ட் பண்ணலாமா? தல, தளபதி ரசிகர்களுக்கு விவேக் வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
காமெடி நடிகர் விவேக் தனது திரைப்படங்களில் காமெடி மட்டுமின்றி முடிந்த அளவு சமூக கருத்துக்களை தெரிவித்து வருபவர் என்பது தெரிந்ததே. மூடநம்பிக்கை ஒழிப்பு உள்பட பல விஷயங்களை அவர் தனது காமெடி மூலம் மக்களுக்கு புரியும்படி கூறி வருகிறார்.
மேலும் நிஜ வாழ்விலும் அவர் பல சமூக சேவைகளை செய்து வருகிறார். குறிப்பாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் வேண்டுகோளின்படி ஒரு கோடி மரம் நடும் சிறப்பான செயல் ஒன்றை கடந்த சில வருடங்களாக அவர் செய்து வருகிறார்
இந்த நிலையில் நாளை அதாவது அக்டோபர் 15ஆம் தேதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் வருகிறது. இதனையடுத்து தல மற்றும் தளபதி ரசிகர்களுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளில் அவர் கூறியிருப்பதாவது: நாளை அக்15 பாரத ரத்னா கலாம் ஐயா பிறந்த நாளை ஒட்டி அனைத்து தலைவர்/தளபதி/தல ( நாம் அன்புடன் வைத்த செல்லப் பெயர்கள்) ரசிகர்கள் மரம் நட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அதை சமூக தளங்களில் பதிவு செய்து டிரெண்ட் செய்ய வேண்டுகிறேன்' என்று கூறியுள்ளார்
தல தளபதி ரசிகர்கள் தனித்தனியே பல விஷயங்களை உலக அளவில் டிரெண்ட் ஏற்படுத்திய நிலையில் இருவரும் இணைந்தால் மரம் வளர்க்கும் விழிப்புணர்வை டிரெண்ட் செய்வது ஒரு பெரிய விஷயமே இல்லை. தல தளபதி ரசிகர்கள் விவேக்கின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு டிரெண்ட் செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்
Dear tweeples! #plantforkalam nu trend pannalaama?
— Vivekh actor (@Actor_Vivek) October 14, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com