ஊரடங்கு முடிந்தபின் இதை வைத்து கொள்ளலாமே: அரசுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தேர்வு என்பது மாணவர்களுக்கு மட்டுமின்றி அவர்களுடைய பெற்றோர்களுக்கும் மன இறுக்கமானது என்றும் எனவே பத்தாம் வகுப்பு தேர்வை ஊரடங்கு முடிந்த் பின்னர் வைத்துக் கொள்ளலாமே என்றும் நடிகர் விவேக் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை நடைபெறும் என சமீபத்தில் பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த தேர்வுக்கு தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து வருவதாகவும், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி உள்பட அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும் தேர்வு அறையில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு படித்துவரும் மாணவர்கள் பலர் ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்கள் சொந்த ஊரில் இருப்பதால் அவர்கள் தேர்வு மையத்திற்கு வருவதில் சிக்கல் எழுந்து உள்ளதாகவும் எனவே தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களுடைய பெற்றோர்களும் தேர்வு மையத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எனவே இ-பாஸ் உள்ளிட்டவைகளில் வாங்குவதில் சிக்கல்கள் இருப்பதால் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மனஇறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயை செய்து பரிசீலிக்கவும்.
நடிகர் விவேக்கின் இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மனஇறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப் பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயை செய்து பரிசீலிக்கவும்.
— Vivekh actor (@Actor_Vivek) May 17, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout