மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது… நடிகர் விவேக் மறைவு குறித்து கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமா உலகில் மங்காத புகழைப் பெற்றவர் நகைச்சுவை நடிகர் விவேக். இவர் நேற்று மாரடைப்புக் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூச்சுதிணறல் காரணமாக அவதிப்பட்ட நடிகர் விவேக்கிற்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியானது.
மேலும் அவரது இறப்புக்கு Lad (left anterior descending artery) எனப்படும் இடது தமனி முழுவதிலும் அடைப்பு ஏற்பட்டு இருப்பதே காரணம் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தற்போது அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும் நடிகர் விவேக்கின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். கூடவே அரசியல் தலைவர்கள், இந்திய பிரதமர் உட்பட பலரும் தங்களது வருத்தத்தை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தைச் சார்ந்த இளம் கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் நடிகர் விவேக் மறைவை குறித்து தனது டிவிட்டரில் உருக்கமாகப் பதிவிட்டு உள்ளார். அதில், “மரணம் மனிதனுக்கு நிச்சயம் எனத் தெரிந்த பின்னும் அதனை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது. ஒரு சிலரை இழக்கும்போது மட்டும். திரைப்படங்களில் தனது நகைச்சுவை மூலம் சமூகக் கருத்துகளைக் கொண்டு சேர்ந்த ஒரு லெஜெண்ட். தனிப்பட்ட முறையில் எனக்கு “மின்னலே“ மற்றும் “ரன்“ ஆகிய படங்கள் மிகவும் பிடிக்கும். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்” என தினேஷ் கார்த்திக் தெரிவித்து உள்ளார்.
மரணம் மனிதனுக்கு நிச்சயம் என தெரிந்த பின்னும் அதனை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது ஒரு சிலரை இழக்கும் போது மட்டும்
— DK (@DineshKarthik) April 17, 2021
A legend who drove social messages through his humour in the https://t.co/uQc5sF7vwD personal favourites being MINNALE and RUN amongst others.May his soul rest in peace pic.twitter.com/KRQ7FEf3oG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com