மே இறுதியில் விடிவுகாலம் கிடைக்கும்: பிரபல நடிகரின் லேட்டஸ்ட் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது திரையுலகினர் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வரும் நிலையில் ஏற்கனவே ஒருசில வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வு செய்த நடிகர் விவேக் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நாம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தற்போது இருக்கிறோம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் முழுமையான ஊரடங்கை நாம் பின்பற்றினால் எப்படியாவது இந்த தொற்றில் இருந்து நாம் வெளியே வந்துவிடலாம். இது நம் கையில்தான் உள்ளது. இனிமேலாவது விழித்துக் கொண்டு நாம் தனிமையில் இருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
லேட்டஸ்ட் தகவலின்படி மே மாத கடைசியில் கொரோனாவில் இருந்து உலகிற்கு ஒரு விடிவு காலம் வரும் என சொல்கிறார்கள். அதுபோல் நமக்கும் சீக்கிரம் விடிவுகாலம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது அதற்கு நாம் தமிழக அரசுடனும், இந்திய அரசுடனும் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக்கின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நன்றி @jayatvdottv https://t.co/xXEj833E0O
— Vivekh actor (@Actor_Vivek) April 27, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com