நடிகர் விவேக்கிற்கு கிடைத்த விலைமதிப்பில்லா பரிசு!

  • IndiaGlitz, [Monday,December 02 2019]

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கிய ’மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தில் கடந்த 1987ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் நடிகர் விவேக். அதன்பின் கே.பாலச்சந்தர் உள்பட பல பிரபல இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்

இந்த நிலையில் கே பாலச்சந்தரை தனது குருநாதராக எண்ணி கடந்த பல வருடங்களாக திரை உலகில் பல்வேறு சாதனைகளை செய்து கொண்டிருக்கும் நடிகர் விவேக்கிற்கு, தற்போது பாலச்சந்தரின் விலைமதிப்பில்லாத பொருள் ஒன்று பரிசாக கிடைத்துள்ளது. ஆம், கே.பாலசந்தர் திரைக்கதை எழுத பயன்படுத்தும் பேனாவை அவரது மகள் புஷ்பா கந்தசாமி அவர்கள் விவேக்கிற்கு பரிசாக அளித்துள்ளார். விலைமதிப்பில்லா இந்த பரிசு குறித்து நடிகர் விவேக் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது:

யாருடைய எழுத்துக்களைப் படித்தும், படமாகப் பார்த்தும், பரவசம் அடைந்து திரைத்துறைக்கு வந்தேனோ, அவர் எழுத உபயோகித்த பேனாவே எனக்கு கிடைத்தது ... பரிசு அல்ல... வரம்! அன்போடு அளித்த புஷ்பா கந்தசாமி அவர்களுக்கு என் இதய நன்றிகள்’ என்று கூறியுள்ளார்.

More News

பாக்யராஜூக்கு ஆதரவு கொடுத்த ஆண்கள் சங்கம்: இதோ பரபரப்பு கடிதம்!

சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் பெண்கள் குறித்து பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் பேசிய கருத்துக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்ததோடு

17 வயது சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்: கோவையில் நடந்த கொடூரம்

கோவையில் 11ஆம்வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தனது காதலனுடன் சிறுவர் பூங்காவிற்கு வந்த போது அந்த பூங்காவில் இருந்த 6 பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தரும் தகவல்

தளபதி 64 படத்தில் இணைந்த நடிகரின் உணர்ச்சிவசமான டுவீட்:

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் சென்னை மற்றும் டெல்லி படப்பிடிப்புகள் முடிவடைந்து விரைவில் கர்நாடக மாநிலத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே 

உறவினரால் பாலியல் பலாத்காரம்: கல்லூரி பேராசிரியை தூக்கில் தொங்கி தற்கொலை

சகோதரி கணவரின் தம்பியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி பேராசிரியை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

'மாநாடு' படத்திற்காக சிம்பு இதுவரை செய்யாத விஷயம்!

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த ஒரு ஆண்டு முன் அறிவிக்கப்பட்டிருந்தது.