கொஞ்சம் சரி, கொஞ்சம் தவறு: பத்திரிகை செய்தி குறித்து நடிகர் விவேக் விளக்கம்

  • IndiaGlitz, [Friday,April 12 2019]

முன்னணி தமிழ் ஊடகம் ஒன்றில் நடிகர் விவேக், தினகரனின் அமமுகவுக்கு பிரச்சாரம் செய்ய மறுத்ததாக செய்தி வெளிவந்துள்ளது. இந்த செய்தியை குறிப்பிட்டுள்ள நடிகர் விவேக், இந்த செய்தியில் கொஞ்சம் சரி, கொஞ்சம் தவறு இருப்பதாக கூறியுள்ளார்.

அந்த பத்திரிகையில் நடிகர் விவேக்கை தினகரன் பிரச்சாரத்திற்கு அழைத்ததாகவும், அதற்கு விவேக் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அமமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு மட்டும் தான் பேசுவதாகவும் அதிமுக உள்பட மற்ற கட்சியை விமர்சிக்க மாட்டேன் என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இதற்கு தினகரன் ஒப்புக்கொள்ளாததால் விவேக் பிரச்சாரம் செய்ய மறுத்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது

இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் விவேக் கூறியிருப்பதாவது: அன்பிற்குரிய தினகரன் பத்திரிக்கை நிருபருக்கு. இன்று நீங்கள் வெளியிட்ட செய்தி கொஞ்சம் சரி கொஞ்சம் தவறு. அமமுக என்னை அழைத்து நான் மறுத்ததாக வந்த செய்தி தவறு. ஆனால் நான் பொதுவானவன் என்பது சரி. டிடிவி தினகரன் உட்பட அனைத்து தலைவர்களும் என் நண்பர்களே என்று கூறியுள்ளார்.
 

More News

என் ஓட்டு அவருக்குத்தான்: ஸ்ருதிஹாசனின் டுவீட்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் மக்களவை தேர்தலில் ஒருசில சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து 40 மக்களவை தொகுதிகளிலும்,

டிவி ரிமோட்டை உடைத்து ஆத்திரமான கமல்ஹாசன்: அதிர்ச்சி வீடியோ

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியின் டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு கேட்டு கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றி ஹீரோவான பாட்டி!

சென்னைக்கு அருகேயுள்ள பூந்தமல்லியில் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை அந்த குழந்தையின் பாட்டி தனது உயிரையும் மதிக்காமல் கிணற்றில் குதித்து காப்பாற்றிய சம்பவம்

பாடகியாக மாறிய விஜய் டிவி பிரபலம்

விஜய் டிவியில் 'கலக்க போவது யாரு', கிங்ஸ் ஆப் காமெடி, சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரியங்கா தற்போது திரைத்துறையிலும் காலடி வைத்துள்ளார்.

என் நண்பன் நிச்சயம் ஜெயித்துவிடுவான்: சமுத்திரக்கனி தேர்தல் பரப்புரை

தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சிகளை ஆதரித்து திரையுலகினர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில்,