சமூக வலைத்தளத்தில் இருந்து திடீரென விலகிய விஷ்ணு விஷால்: என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் திடீரென சமூகவலைதளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ’வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதன்பின்னர் ’நீர்ப்பறவை’ ’முண்டாசுப்பட்டி’ ’ஜீவா’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்த விஷ்ணு விஷாலுக்கு ’ராட்சசன்’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
சமீபத்தில் விஷ்ணுவிஷால் நடிப்பில் வெளியான ’எப்.ஐ.ஆர்’ படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது அவர் ’மோகன்தாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா உடன் இணைந்து ’கட்டா குஸ்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘டுவிட்டரில் இருந்து தற்காலிமாக வெளியேறுவதாகவும் விரைவில் சந்திப்போம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஷ்ணுவிஷால் திடீரென டுவிட்டரில் இருந்து தற்காலிகமாக வெளியேறுவதற்கான காரணத்தை அவர் தெரிவிக்காததால் ரசிகர்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
Hello guys...
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) April 21, 2022
Takin a break is very important for life...
Taking a break from social media for sometime..
See u soon :)
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout