சாலையில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்: நடிகர் விஷ்ணுவிஷாலின் அதிரடி நடவடிக்கை!

  • IndiaGlitz, [Wednesday,September 23 2020]

தமிழ் சினிமாவில் இளைதலைமுறை நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால் என்பதும், சமீபகாலமாக தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நடிகர் இவர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் நடிகர் விஷ்ணுவிஷால் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அந்த வீடியோவை காவல்துறைக்கும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒருசில இளைஞர்கள் காரில் சென்று கொண்டிருப்பது போன்றும் அவர்கள் காரில் இருந்து வெளியே நின்று கொண்டு அட்டகாசம் செய்யும் காட்சிகள் உள்ளன.

இதுகுறித்த வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள விஷ்ணு கூறியதாவது: நம் நாட்டின் படித்த இளைஞர்கள் கூட எப்படி நடந்துகொள்கிறார்கள் பாருங்கள். பொதுவாக நான் இதை செய்ய மாட்டேன். ஆனால், இதை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் இது அவர்களுடை உயிரை மட்டும் பணயம் வைத்துக் கொள்ளாமல், மற்றவர்களையும் தொந்தரவு செய்யும் வகையில் உள்ளது. இதுபோன்ற தேவையற்ற ஸ்டண்ட் முயற்சியால் அப்பாவிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே தயவு செய்து இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த சம்பந்தப்பட்ட காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் இந்த வீடியோ எடுக்கப்பட்ட தேதி மற்றும் நேரம் குறித்த தகவலை பகிருமாறும் காவல்துறை விஷ்ணு விஷாலிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட முன்னணி ஆர்ஜே: பரபரப்பு தகவல்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் அக்டோபர் 4ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்: லீக் ஆன புகைப்படங்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் கடந்த ஒரு மாதமாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்த நிலையில்

விஜிபி சிலை மனிதன் குறித்த வதந்தி: அவரே அளித்த விளக்கம்

சென்னை விஜிபி கடற்கரையான கோல்டன் கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் முதன் முதலில் பார்ப்பது வாயில் அருகே உள்ள அசையாமல் நிற்கும் நபரைத்தான் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தியக் காலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழகத்திற்குச் சிறப்பிடம் வேண்டும்… கோரிக்கை வைத்த தமிழக முதல்வர்!!!

சமீபத்தில் இந்திய கலாச்சாரத்தை ஆராய்வதற்காக 14 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்தது.

ஊரேகூடி நிச்சயித்த திருமணத்தை தைரியமாகத் தடுத்து நிறுத்திய 13 வயது சிறுமி… பரபரப்பு சம்பவம்!!!

கொரோனா ஊரடங்கால் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.