சாலையில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்: நடிகர் விஷ்ணுவிஷாலின் அதிரடி நடவடிக்கை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் இளைதலைமுறை நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால் என்பதும், சமீபகாலமாக தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நடிகர் இவர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் நடிகர் விஷ்ணுவிஷால் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அந்த வீடியோவை காவல்துறைக்கும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒருசில இளைஞர்கள் காரில் சென்று கொண்டிருப்பது போன்றும் அவர்கள் காரில் இருந்து வெளியே நின்று கொண்டு அட்டகாசம் செய்யும் காட்சிகள் உள்ளன.
இதுகுறித்த வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள விஷ்ணு கூறியதாவது: நம் நாட்டின் படித்த இளைஞர்கள் கூட எப்படி நடந்துகொள்கிறார்கள் பாருங்கள். பொதுவாக நான் இதை செய்ய மாட்டேன். ஆனால், இதை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் இது அவர்களுடை உயிரை மட்டும் பணயம் வைத்துக் கொள்ளாமல், மற்றவர்களையும் தொந்தரவு செய்யும் வகையில் உள்ளது. இதுபோன்ற தேவையற்ற ஸ்டண்ட் முயற்சியால் அப்பாவிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே தயவு செய்து இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த சம்பந்தப்பட்ட காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் இந்த வீடியோ எடுக்கப்பட்ட தேதி மற்றும் நேரம் குறித்த தகவலை பகிருமாறும் காவல்துறை விஷ்ணு விஷாலிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
The educated youth of our country ..??
— VISHNU VISHAL - stay home stay safe (@TheVishnuVishal) September 22, 2020
Normally i dont do this ..
But had to put this because they were not just risking their own lives but even troubling the other commuters by trying to look cool doing the unnecessary stunt.. @hydcitypolice please look in to this .. pic.twitter.com/09Lte9nh9L
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com