முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கருத்துக்கு பதிலடி கொடுத்த நடிகர் விஷ்ணு விஷால்..!

  • IndiaGlitz, [Tuesday,September 05 2023]

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பதிவு செய்த ஒரு கருத்துக்கு நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற இருப்பதாக கூறப்படும் நிலையில் இது குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது குறித்து வீரேந்திர சேவாக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நான் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத் என்ற பெயரை அதிகாரபூர்வமாக திரும்ப பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது. பிசிசிஐ மற்றும் ஜெய்ஷாவை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இந்த உலக கோப்பையில் நமது வீரர்கள் பாரத் என நெஞ்சில் எழுதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சேவாக்கின் இந்த கருத்திற்கு நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இது குறித்து கூறிய போது ’ஒரு நாட்டின் பெயரை மாற்றுவது எப்படி பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவும்? இது மிகவும் விசித்திரமாக உள்ளது. இந்தியா எப்போதும் பாரத் ஆகவே இருந்தது. நம் நாட்டை இந்தியா என்றும் பாரத் என்றும் நாம் அறிவோம். திடீரென ஏன் இந்தியா என்ற பெயரை தூக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா? என்றும் விஷ்ணு விஷால் சேவாக்கிற்கு கேள்வி எழுப்பி உள்ளார்.