ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரை சந்தித்த நடிகர் விஷ்ணு

  • IndiaGlitz, [Wednesday,March 27 2019]

நடிகர் விஷ்ணு சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றின்போது காயம் ஏற்பட்டு தற்போதுதான் குணமடைந்துள்ளார். விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளார் மெக்ரத்தை நடிகர் விஷ்ணு சந்தித்தார். இந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு வெளியான விஷ்ணுவின் 'ராட்சசன்' மற்றும் 'சிலுக்குவார்ப்பட்டி' சிங்கம்' ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகியதை அடுத்து அவர் தற்போது 'ஜகஜல கில்லாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எழில் இயக்கி வருகிறார்.
 

More News

தேர்தலுக்கு முன் இன்னொரு தாக்குதலா? இம்ரான்கான் சந்தேகம்

தேர்தலுக்கு முன் பாகிஸ்தான் மீது இந்திய அரசு இன்னொரு தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதாக அந்நாட்டு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

வித்யாபாலனுடன் ரொமான்ஸ்: தல அஜித்தின் அட்டகாசமான புதிய லுக்?

தல அஜித் நடித்து வரும் 'பிங்க்' ரீமேக் திரைப்படமான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

பிரதமர் மோடி கூறிய முக்கிய விஷயம் இதுதான்!

இன்று நாட்டு மக்களுக்கு முக்கிய விஷயம் ஒன்றை அறிவிக்கவுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி சற்றுமுன்னர் தனது டுவிட்டரில் கூறிய நிலையில் அந்த முக்கிய விஷயம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

கோவை சிறுமி கொலை: பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்

கோவையில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி மர்மமான முறையில் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டிருந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

ரஜினி-முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படமான 'தலைவர் 166'