ஜல்லிக்கட்டு: பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் கடிதம்

  • IndiaGlitz, [Wednesday,January 18 2017]

ஜல்லிக்கட்டு குறித்து நடிகர் விஷால் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக வெளிவந்த வதந்தியை அடுத்து சமூக வலைத்தளங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் இருந்து சமீபத்தில் விலகிய விஷால், தான் என்றுமே ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல என்றும் விளக்கம் அளித்திருந்ததை ஏற்கனவே பார்த்தோம்
மேலும் ஜல்லிக்கட்டுக்கு தன்னால் முடிந்த ஆக்கபூர்வமான செயலை செய்வதாகவும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார். இந்த வகையில் தற்போது அவர் பாரத பிரதமர் நரேந்திரமோடிக்கு ஜல்லிக்கட்டு தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நடிகர் விஷால் அந்த கடிதத்தில், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் உரிமை என்றும் அதற்கு விதிக்கப்பட்டுல்ள தடையை நீக்க பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுகுறித்து நேரில் பேச தனக்கு நேரம் ஒதுக்கி தர வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
விஷாலின் கடிதத்திற்கு மதிப்பளித்து பிரதமர் அப்பாய்மெண்ட் தருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

பீட்டாவுக்கும் ஆதரவு, ஜல்லிக்கட்டுக்கும் ஆதரவு. பிரபல பாடகி

தற்போது இளைஞர்களால் நடத்தப்பட்டு வரும் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் மட்டுமின்றி பீட்டாவுக்கு எதிரான போராட்டமாகவும் உள்ளது. .

இளைஞர்களின் ஒற்றுமைக்கும், தைரியத்திற்கும் தலை வணங்குகிறேன். நயன்தாரா

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இளைஞர்களின் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதுவரை பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் ஆகியோர் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர்.

மெரினா ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் சிவகார்த்திகேயன்

எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் இளைஞர்கள் பட்டாளம் முதன்முதலில் ஒன்று சேர்ந்து நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது.

சீறும் சிங்கங்களாக போராடும் மாணவர்களுக்கு நடிகர் சிவகுமார் பாராட்டு

கம்பீரத்துக்கும், அழகுக்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், நாட்டுப்புற மாடுகள், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம்.

ஜல்லிக்கட்டு போராளிகளின் 3 கோரிக்கைகள். தமிழக அரசு ஏற்குமா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று காலை முதல் சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் பட்டாளம் கூடி போராட்டம் நடத்தி வருகிறது