ஆர்.கே.நகர் தொகுதியில் விஷால் போட்டி உறுதி

  • IndiaGlitz, [Saturday,December 02 2017]

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடவுள்ளதாக நேற்று செய்திகள் பரவின. ஆனால் இந்த செய்தியை நேற்று விஷால் தரப்பினர் மறுத்தனர்

இந்த நிலையில் சற்றுமுன்னர் ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக விஷால் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை அவர் வேட்புமனுதாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஆர்.கே.நகர் வேட்பாளராக களமிறங்கும் விஷாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு தருவார் என்றும், வரும் திங்களன்று விஷால் வேட்புமனுதாக்கல் செய்யும்போது கமல் உடனிருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தின் பதவிகளை கைப்பற்றிய விஷால், எம்.எல்.ஏ பதவியையும் கைப்பற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்