செருப்பால் அடிக்க வேண்டும்.. நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து நடிகர் விஷால்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என நடிகர் விஷால் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகர்கள் முதல் இயக்குனர்கள் வரை வழக்கில் சிக்கி உள்ளனர் என்பதும் மலையாள திரையுலகில் நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நடிகர் விஷால் ’மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது போல் தமிழகத்திலும் அமைக்கப்படும் என்றும் பாலியல் தொல்லை கொடுப்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் பாலியல் தொல்லை குற்ற செயல்களை நாங்கள் தடுக்க முடியாது, நாங்கள் காவல்துறை அல்ல, அதே நேரத்தில் பாலியல் தொல்லை குறித்து நடிகர் சங்கத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம்’ என்றும் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் இல்லை என்று கூற முடியாது, காலகாலமாக இந்த புகார் வந்து கொண்டு தான் இருக்கின்றன, ஆனால் அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் உப்புமா கம்பெனிகளால் மட்டும்தான் பெண்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்கின்றனர் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களில் ஹேமா கமிட்டி போன்று பத்து பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் இதில் பாதிக்கப்பட்ட நடிகைகள் புகார் அளிக்கலாம் என்றும் விஷால் தெரிவித்தார். விஷாலின் இந்த பேட்டியை அடுத்து தமிழ் சினிமாவில் பாதிக்கப்பட்ட எந்தெந்த நடிகைகள் புகார் அளிக்க போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments