விஜய் டிவியின் 'பாக்கியலட்சுமி' தொடரில் இருந்து விலகிய நடிகர்.. 'இவருக்கு பதில் இவர்' யார்?

  • IndiaGlitz, [Tuesday,May 21 2024]

தொலைக்காட்சி சீரியல்களை பொறுத்தவரை திடீரென நடிகர் நடிகைகள் விலகுவதும் ’இவருக்கு பதில் இவர்’ என்ற ஒரு டைட்டில் கார்டை மட்டும் போட்டு வேறு நடிகர் நடிகையை ஒப்பந்தம் செய்து சீரியலை தொடர்வார்கள் என்பது சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிகழ்வாகும்.

அந்த வகையில் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து நடிகர் ஒருவர் விலகி உள்ளதாகவும் அவருக்கு பதிலாக நடிக்கும் நடிகர் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நான்கு வருடமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் எழில் என்ற கேரக்டரில் நடிகர் விஷால் நடித்து வந்தார். தொலைக்காட்சி தொகுப்பாளரான இவர் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மூலம் நடிகராக மாறிய நிலையில் திடீரென தற்போது இந்த தொடரில் இருந்து அவர் விலகி உள்ளார். ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட இவர் வேறு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் விஷாலின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில் அவர் தற்போது சில தவிர்க்க முடியாத காரணத்தினால் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த சீரியலில் அவருடைய கேரக்டரில் நடிகர் நவீன் அறிமுகம் ஆகி உள்ளார். விஷாலுக்கு பதில் நவீன் நடிக்கும் இந்த தொடர் இனி எப்படி செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார் மனைவி அம்ருதா ஸ்ரீனிவாசன்.

சமீபத்தில் கூட கார்த்திக் குமார் குறித்து சுஜி முன் வைத்த குற்றச்சாட்டுகள் பலரை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது...

நடிகர் கிச்சா சுதீப்புக்கு இவ்வளவு பெரிய மகளா? இன்னொரு ஹீரோயின் தயார்..!

பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் மகள் தனது 20 வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கும் நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் வருகிறது.

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது இந்த பிரபல இயக்குனரா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

அஜித் தற்போது 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர் அவர் நடிக்கும் அடுத்த படத்தை

அபுதாபி சென்ற ரஜினிகாந்த் லூலு குழும நிறுவனரை சந்தித்தாரா? என்ன காரணம்? வைரல் வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபுதாபி சென்றதாக தகவல் வெளியான நிலையில் அங்கு லூலு குழுமத்தின் நிறுவனரை சந்தித்து அவருடன் காரில் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை மற்றும் காங்கிரஸ் பிரமுகர் கொலை.. தலைமறைவான கணவரால் பரபரப்பு..!

நடிகை மற்றும் காங்கிரஸ் பிரமுகர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவரது கணவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்தான் நடிகையை கொலை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.