வடபழனி கோவிலில் பிச்சை எடுத்த ஜமுனாவுக்கு விஷால் உதவி
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சிவகுமார் ஆகியோர்களுடன் நடித்த குரூப் டான்சர் ஜமுனா என்பவர் சென்னை வடபழனி கோவிலில் பிச்சை எடுப்பதாகவும், அவர் தனக்கு, தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க செயலாளர் விஷால் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த செய்தியையும் சமீபத்தில் பார்த்தோம்.
இந்த நிலையில் ஜமுனாவின் நிலைமையை கேள்விப்பட்ட விஷால் உடனடியாக ஜமுனா அவர்களுக்கு உதவி செய்ய முடிவு எடுத்து அவருடைய மேலாளர் முருகராஜ் மற்றும் அகில இந்திய விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணனையும் உடனே அவர்களை சந்தித்து தேவையான உதவி செய்யுமாறு அனுப்பினார்.
இருவரும் ஜமுனாவை நேரில் சந்தித்து அவர்களிடம் உங்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறோம் என்று தெரிவித்தனர். ஆனால் அவர், என்னை முதியோர் இல்லத்தில் சேர்க்கவேண்டாம். எனக்கு மாதம் மாதம் உதவி தொகை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை நிறைவேற்றுவோம் என்று கூறி புது துணியும் அளித்துள்ளார்கள், மேலும் மாதம் தோறும் 2000 ருபாய் வழங்கவும் வாக்குறுதி அளித்துள்ளனர் . “தேவி அறக்கட்டளை” மூலம் நடிகர் விஷாலின் மேலாளர் முருகராஜ் மற்றும் அகில இந்திய விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் இந்த உதவி தொகையை வழங்கினார்கள்
விஷாலின் இந்த உதவிக்கு ஜமுனா நன்றி கூறினார். நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்து வரும் விஷாலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments