விஷால் செய்த உயிர்காக்கும் உதவி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷால் நடிகர் சங்கத்தின் மூலமும், தனது சொந்த பணத்திலும் பல உதவிகள் செய்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் எம்.ஆர்.குகன் என்ற நடிகர் சங்கத்தின் உறுப்பினரின் மனைவி சூர்யபிரபா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் சென்னை தி.நகர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1,90,000 அவசரமாக தேவைப்படுவதாகவும், அந்த பணத்தை உறுப்பினர் செலுத்த முடியாத நிலை இருந்ததும் விஷாலின் கவனத்திற்கு வந்தது.
உடனடியாக பாரதிராஜா மருத்துவமனையின் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு பேசிய விஷால் ரூ.1,90,000 ரூபாயை ரூ.1,53,000 என பேசி குறைத்தது மட்டுமின்றி அந்த பணம் முழுவதையும் தனது விஷால் அறக்கட்டளை மூலமாக உடனே செலுத்தி சிகிச்சை தொடர்ந்து நடைபெற உதவி செய்துள்ளார். விஷாலின் இந்த மகத்தான உதவிக்கு எம்.ஆர்.குகனின் குடும்பத்தினர் நன்றி கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com